Tag: TN Text books Online free download
குறிஞ்சிப்பாட்டு ஓர் அறிமுகம்
🏆ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவிப்பதற்காகக் கபிலர் பெருமானால் பாடப் பெற்றது. 🏆தமிழறிவித்தலாவது தமிழருக்கே உரிய அகத்திணைப் பண்பாட்டை உணர்த்துவதாகும். 🏆இந்நூல் ஆசிரியப்பாவால் ஆகிய 261 அடிகளையுடையது. 🏆தோழி செவிலிக்கு அறத்தோடு நின்ற வழிக் கூறும் கூற்றாக அமைந்துள்ளது. 🏆அறத்தொடு நிற்றல் என்னும் அகத்துறையைச் சார்ந்த இது குறிஞ்சிக்குரிய முதல், கரு, உரிப்பொருள்களைக் கொண்டு விளங்குகிறது. 🏆நச்சினார்க்கினியரும், பரிமேலழகரும் இதனைப் பெருங்குறிஞ்சி என்று சிறப்பித்துரைப்பர். 🏆நாடகப்பாங்கில் விறுவிறுப்பாக அமைந்துள்ள இந்நூலில் செங்காந்தள் முதல் மலை எருக்கு ஈறாக…
பொருநராற்றுப்படை சிறப்புகள்
🎯 இந்நூல் 248 அடிகளை உடையது. 🎯பொருநர் என்பதற்கு, மற்றொருவர் போல் வேடம் கொள்வோர் என்பது பொருள் 🎯இவர்கள் ஏர்க்களம் பாடுவோர் போர்க்களம் பாடுவோர், பரணி பாடுவோர் என வகைப்படுவர். 🎯பொருநர் என்பவர் – வீரர் அல்லது மறவர் போல் வடிவம் பூணுவோர். 🎯இப்பாட்டில் பொருநர் என்பது போர்க்களம் பாடுவோரைக் குறிப்பதாகும். 🎯பரிசில் பெறக் கருகிய ஒரு பொருநனைப் பரிசில் பெற்ற ஒரு பொருநன் ஆற்றுப்படுத்துகின்றான். 🎯இதன் ஆசிரியர் முடத்தாமக் கண்ணியார் ஆவார். 🎯இதன் பாட்டுடைத் தலைவன்…
சிறுபாணாற்றுப்படை நூல் குறிப்புகள்
🎯பண்பாடுவோர் பாணராவர் 🎯பாணர்கள் – இசைப்பாணர், யாழ்ப்பாணர், பிச்சை ஏற்றுப் பிழைக்கும் மண்டைப்பாணர் என மூவகைப்படுவர். 🎯சிறிய யாழை வாசிப்போரைச் சிறுபாணர் என்றும், பெரிய யாழை வாசிப்போரைப் பெரும்பாணர் என்றும் பாகுபடுத்துவர். 🎯இது யாழ்ப்பாணருள் சிறுபாணரை ஆற்றுப்படுத்துவதாக அமைந்தது. 🎯இந்நூல் 269 அடிகளை உடையது. பாணாற்றுப்படை நூல்களுள் அடி அளவால் சிறிதாக உள்ளது. 🎯பரிசு பெற்ற பாணன் பரிசில் பெறவிருக்கும் பாணனை ஓய்மாநாட்டு நல்லியக்கோடனிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்தது. 🎯இப்பாடல், ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது. 🎯இதனைச் “சிறப்புடைத்தான சிறுபாணாற்றுப் படை”…
பெரும்பாணாற்றுப்படைசிறப்புகள்
🎯இந்நூல் 500 அடிகளை உடையது. 🎯காஞ்சி மாநகரத்தில் அரசு செலுத்திய இளந்திரையனைக் தொண்டைமான் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியது. 🎯இப்பாட்டைப் “பாணாறு” எனவும் வழங்குவர். 🎯பரிசில் பெறவிருக்கும் பெரும் பாணனைப் பரிசில் பெற்ற பாணன், தொண்டைமான் இளந்திரையனிடம் ஆற்றுப்படுத்தியது. 🎯வென்வேற் கிள்ளி என்னும் சோழ மன்னனுக்கும் பீலிவளை எனும் நாககன்னிக்கும் பிறந்தவனே இளந்திரையன் என மணிமேகலை கூறும். 🎯காஞ்சி இவன் தலைநகர். “இடனுடைப் பேரியாழ் முறையுளிக் கழிப்பி“ என்ற தொடர் இடம் பெறலாலும், மிக்க…
திருமுருகாற்றுப்படை குறிப்புகள்
✒️இப்பாடலில் ஆசிரியர் நக்கீரர் ஆவார். அறுபடை வீடுகள் பற்றிய முழுக்கட்டுரை தொகுப்பு ✒️கீரர் என்பது இயற்பெயரென்றும் ‘ந’ என்பது சிறப்புப் பொருள் குறித்ததோர் இடைச்சொல்லென்றும் அறிஞர் கூறுவர். ✒️இந்நூல் 317 அடிகளால் இயன்ற நேரிசை ஆசிரியப்பாவாகும். ✒️பத்துப்பாட்டு நூலுக்குக் கடவுள் வாழ்த்தாகத் திருமுருகாற்றுப்படை விளங்குகிறது. ✒️தொல்காப்பிய இலக்கணத்தில்படி ஆற்றுப்படை என்பது உலகியல் வாழ்வு பற்றியதாகும். ✒️திருமுருகாற்றுப்படையோ ஆன்மீக வாழ்வு பற்றியதாகும். ✒️பத்துப்பாட்டின் உரையாசிரியர், நச்சினார்க்கினியர், “வீடு பெறுவதற்குச் சமைந்தானோர் இரவலனை வீடு பெற்றானொருவன் முருகனிடத்தே ஆற்றுப்படுத்த லென்று…
பத்துப்பாட்டு நூல்கள் விளக்கம்
🏀’பாட்டும் தொகையும்’ எனும் போது, பாட்டு என்பது பத்துப்பாட்டைக் குறிக்கும். 🏀 “மூத்தோர்கள் பாடியருள் பத்துப்பாட்டும் எட்டுத் தொகையும்’ என்று தமிழ்விடுதூது இதனைப் புகழும். 🏀 பத்துப்பாட்டிலுள்ள பாடல்களைப்பா என்றும் பாட்டு என்றும் சுட்டுவர். 🏀 பத்துப்பாட்டு என்பது நூறு அல்லது நூற்றின்மிக்க அடிகளால் ஆகிய பத்துத் தனித்தனி நூல்களைக் கொண்ட ஒரு தொகுப்பாகும். 🏀 இஃது அகவற்பாக்களால் அமைந்த பத்துப்பாடல்களின் கோவையாகும். நூறடிச் சிறுமை நூற்றுப் பத்தளவே ஏறிய அடியின் ஈரைம்பாட்டு தொடுப்பது பத்துப் பாட்டெனப்படுமே (பன்னிரு…
எட்டுத்தொகை நூல்கள்|Tnpsc Time
தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க இலக்கியங்கள் மிக முக்கியமான இடத்தைப் பெறுகின்றன. அவற்றில் “எட்டுத்தொகை” எனப்படும் தொகுப்பு தனிச்சிறப்புடையது. சங்க காலத்து புலவர்களின் ஆழ்ந்த சிந்தனை, மனித வாழ்வியல், இயற்கை, காதல், வீரியம் ஆகியவற்றை நுணுக்கமாகப் பதிவு செய்த எட்டு முக்கிய நூல்களின் தொகுப்பே எட்டுத்தொகை ஆகும். எட்டுத்தொகையின் பொருள் மற்றும் அமைப்பு “எட்டு + தொகை” என்ற சொற்களின் சேர்க்கையாக உருவானதே எட்டுத்தொகை. அதாவது எட்டு…
புறநானூறு பாடல் குறிப்புகள்
🔔அகநானூறு போன்று புறப்பொருள் பற்றிய 400 அகவற் பாக்களால் ஆன நூல் 🔔பொருளாலும், அளவாலும் புறநானூறு என்று பெயர் பெற்றது 🔔இது புறம், புறப்பாட்டு, புறம்பு நானூறு என்றும் வழங்கப்படும். 🔔பாரதம் பாடிய பெருந்தேவனார் சிவபெருமான் மீது கடவுள் வாழ்த்துப் பாடியுள்ளார். 🔔இந்நூலைத் தொகுத்தவர், தொகுப்பித்தவர், வாழ்த்துப்பாடல் பெயரும் அறியக் கூடவில்லை. (பாக்களில் வரையறை தெளிவாகத் தெரியவில்லை). 🔔நான்கடி முதல் 40 அடி வரையிலான பாடல்கள் உள்ளன. எனவே இதன் அடியினை நான்கடிச் சிற்றெல்லை 40…
பதிற்றுப்பத்து விளக்கம்
🔔எட்டுத்தொகை நூல்களுள் அகவற்பாவால் புறப்பொருள் பற்றிக்கூறும் நூல். 🔔பாடாண் திணை என்ற ஒரே திணைப் பாடலால் ஆனது. 🔔பத்துச் சேர வேந்தர்கள் பற்றி பத்துப்பத்துப் பாடல்களால் பத்துப் புலவர்கள் பாடிய 100 பாடல்களைக் கொண்டது.. 🔔இதனைத் தொகுத்தவரும், தொகுப்பித்தவரும் யார் எவரெனத் தெரியவில்லை. 🔔இதில் ஒவ்வொரு பத்தும் முதல் பத்து, இரண்டாம் பத்து, எண்ணால் என பெயரிட்டுக் கூறப்படுகின்றன. 🔔இதில் முதல் பத்தும் இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை. 🔔இதன் நான்காம் பத்து அந்தாதித் தொடையால் அமைந்துள்ளது எனலாம். …

